Home Local news அலி சப்ரி எம்.பியின் வீட்டுக்கு தீ வைப்பு

அலி சப்ரி எம்.பியின் வீட்டுக்கு தீ வைப்பு

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் இன்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் வான் வீதியில் உள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது , பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லம், அவரது அலுவலகம் என்பனவற்றின் மீது இனந்தெரியாத குழுக்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. , மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் தேசிய கட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கியது முதல் இன்றுவரை அரசு சார் உறுப்பினராக செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleடி.ஏ.ராஜபக்சவின் நினைவுத் தூபி ஆர்ப்பாட்டகாரர்களால் இடித்தழிப்பு
Next articleபொலிஸாரின் கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் தப்பியோட்டம்