தமிழ் சினிமாவில் நடிகர் பிரசாந்த், சிம்ரன் நடித்து சூப்பர் ஹிட் படமாக வெளியான படம் ஜோடி. இப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து சிறுகதாபாத்திர நடிகையாக அறிமுகமாகியவர் திரிஷா. இதையடுத்து 3 வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
மனசெல்லாம், சாமி, லேசா லேசா, கில்லி, ஆயித எழுத்து போன்ற படங்கள் ஆரம்பகாலகட்டத்தில் மிகப்பெரியளவில் திரிஷாவை கொண்டு சென்றது. அதன் பின் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களிலும் தெலுங்கு முன்னணி நடிகர்களுடனும் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
தற்போது வரை 90ஸ் கிட்ஸ்களில் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா 38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்து வருகிறார்.
இதற்கு காரணம் காதல் தோல்வியும் ஒரு காரணமாக இருந்துள்ளது. சில சர்ச்சை விஷயத்தில் சிக்கியும் தனது மார்க்கெட் இழக்க காரணமாக அவரே இருந்துள்ளார்.
அதில் முக்கிய ஒன்றாக இருந்தது வருண் பிரியன் என்பவருடன் நிச்சயம் வரை சென்று சில காரணங்களால் அப்படியே அந்த விஷயம் நின்று போனது. இதன்பின் தெலுங்கு நடிகர் ராணா டக்குபட்டியுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.
அது உண்மை என்று பல மேடைகளில் இருவரும் நிருபித்தனர். மேலும் சுச்சி லீக் மூலம் திரிஷா ராணாவின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் லிக்கானது.
திரிஷாவை போல் ஹன்சிகா, ஆண்ட்ரியா, நயன் தாரா சிம்பு காதல் புகைப்படம், சின்மயி, அனிருத் உள்ளிட்ட நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்களும் லீக்காகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ஜல்லுக்கட்டுக்கு எதிராக இருக்கும் பீட்டாவிடன் பிராண்ட் அம்பாஸ்டராக இருந்த திரிஷா மக்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார். இப்படி கொடிக்கட்டி பறந்த நடிகை திரிஷா வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிய விஷயங்கள் பல இருந்தது.
இடையில் சில இடைவெளியை எடுத்துகொண்ட திரிஷா 96 படத்தின் மூலம் ரிஎண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து நடித்த படங்கள் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. தற்போது இணையத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.