தமிழ் சினிமாவில் வம்சன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அருள் நிதி. இதனைத் தொடர்ந்து மௌனகுரு, உதயன், ஆறாத சினம் ,இரவுக்கு ஆயிரம் கண்கள் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர்
இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள டைரி, டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.முன்னதாக டைரி திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.
அது போலவே தேஜாவு திரைப்படமும் ஜூன் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது டி பிளாக் திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து மூன்று மாதங்களில் மூன்று அருள்நிதி படங்கள் ரிலீஸாக உள்ளதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.