Home Accident News அராலியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

அராலியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

வட்டுக்கோட்டை – அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மூளாய் பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

மாட்டு வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு

இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்க்க என்ன செய்யவேண்டும்
Next articleஊடகவியலாளர்களின் கேள்விகளை புறக்கணித்து கூட்டத்திலிருந்து அவசரமாக வெளியேறிய மைத்திரி