15 வயது சிறுமியை அரச விருந்தினர் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 29 வயதான அரச உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளைக்கு அண்மையாக உள்ள பிரதேச செயலகமொன்றில் கடமையாற்றும் சந்தேகநபர், சொரன்தொட்ட, வத்தேகல பிரதேசத்தை சேர்ந்தவர்.
காதலிப்பதாக கூறி சிறுமியை அரச விருந்தினர் விடுதிக்கு அழைத்து சென்று தங்கியுன்னார்.
சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று (21) கைது செய்யப்பட்டார்.