Home Local news அரசாங்கத்தின் அவசர வேண்டுகோள்!

அரசாங்கத்தின் அவசர வேண்டுகோள்!

இலங்கையில் டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம்  வெளியிடுள்ளது.

அந்த வகையில்,பின்வரும் சுகாதார வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அவசர வேண்டுகோள்!

 அனைத்துக்கும் முதலில் மிக விரைவாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவும்.
உலகில் அநேகமானோரின் உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டமையினாலேயேயாகும்.

 அத்தியாவசிய தேவைக்கேயன்றி வீட்டிலிருந்து வெளியில் செல்ல வேண்டாம்.

 மக்கள் ஒன்று கூடுகின்ற திருமண வைபவங்கள், மரண வீடுகள் மற்றும் இதர உற்சவங்களில் பங்குபற்றுவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளவும்.

 பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.

 அறைகள், மண்டபங்கள், மின்தூக்கி, வாகனங்கள் போன்ற மூடப்பட்ட இடங்களில்
சனங்களுடன் ஒன்று சேர வேண்டாம்.

 அடிக்கடி சவர்க்காரமிட்டு இரு கைகளையும் கழுவிக் கொள்ளவும்.

 மற்றவர்களுடன் இரு மீற்றர் சமூக இடைவெளியினை பேணவும்.

 நாட்பட்ட நோய்கள் இருப்பின் தொழிலுக்காகவன்றி வீணாக வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்.

 உங்களது மற்றும் உங்களது அன்புக்குரியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதை பிறருக்கு வழங்காது, உங்களுடைய பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றி உங்களையும்,குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும்.

என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமுன்னாள் போராளிகளிடம் இராணுவ தளபதி வேண்டுகோள்;
Next articleகிண்ணியாவில் கடலில் மூழ்கி இளைஞர் மரணம்