அம்பாறை மாவட்டத்தில் தற்போது கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து
வருகின்றது.
நேற்றைய தினம் (11) மாத்திரம் இம்மாவட்டத்தில் 411 தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவே இம்மாவட்டத்தின் உச்ச எண்ணிக்கை எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ”மக்கள் அலட்சியப் போக்குடன் செயற்படாது, மிகக் கவனமானதும்
இறுக்கமானதுமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது காலத்தின் தேவையாகும்”
என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன்
தெரிவித்தார்.