Home Tamil News அமைச்சு பொறுப்புகளை ஏற்க மறுத்த சிரேஸ்ட அமைச்சர்கள் – ஜனாதிபதியுடன் பல மணிநேரம் பேச்சுவார்த்தை

அமைச்சு பொறுப்புகளை ஏற்க மறுத்த சிரேஸ்ட அமைச்சர்கள் – ஜனாதிபதியுடன் பல மணிநேரம் பேச்சுவார்த்தை

அரசாங்கத்தை நிர்வகிப்பதற்காக சிறிய அமைச்சரவையொன்றை நியமிக்கப்போவதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

நான் அரசமைப்பை பின்பற்றியே செயற்படுவேன் அதனை மீறி நடவடிக்கை எடுக்கமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நீண்டநேரம் ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலசிரேஸ்ட அமைச்சர்கள் தங்களிற்கு அமைச்சு பொறுப்பு வேண்டாம் என தெரிவித்துள்ளதுடன் இளையவர்களை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஏப்ரல் 20 ஆம் திகதி நடக்கப்போவது என்ன??
Next articleபீஸ்ட் படத்தின் நாளாவது நாள் தமிழ்நாடு காலெக்ஷன் ! டோடல் வாஸ் அவுட்டா வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் !!!