Home Economy அப்படி என்னதான் நடந்தது இலங்கைக்கு

அப்படி என்னதான் நடந்தது இலங்கைக்கு

? இலங்கையின் சுமார் 18 (பதினெட்டு) லட்சம் ஏக்கர் நிலங்கள் நெல் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

? பணப்பயிர்களான உப உணவு உற்பத்திகள் மற்றம் ஏனைய தானிய வகைகளின் உற்பத்திகளுக்காக சுமார் 5 (ஐந்து) லட்சம் ஏக்கர்களும்,

? பழ வகைகளுக்காக சுமார் 2.5 (இரண்டரை) லட்சம் ஏக்கர்களும்,

? தென்னைத் தோட்டங்களுக்காக சுமார் 11 (பதினொரு) லட்சம் ஏக்கர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

? கணிசமான அளவு நிலங்கள் கால் நடைகளின் மேய்ச்சலுக்காக பயன்படுகின்றன.

இவ்வாறாக இலங்கை மக்களின் உணவுப் பொருட்களின் உற்பத்திகளுக்காக கிட்டத்தட்ட 40 லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள நேரடியாக ஈடுபடுத்தப்படுகின்றன.

? விவசாயத்துக்கு பயன்படும் வகையாக உள்ள பெரியதும் சிறியதுமாக மொத்தத்தில் 400000 (நான்கு லட்சம்) ஏக்கர் நில அளவுக்கு பரந்த நீர்த் தேக்கங்களையும் இலங்கை கொண்டுள்ளது.

? இலங்கையின் மத்தியிலுள்ள மலைகளிலிருந்து அனைத்து திசைகளிலும் நாள நரம்புகள் போல நதிகள் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளை நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கின்றன.

இலங்கையின் மக்களுக்கான உணவு உற்பத்திகளுக்காக விவசாயத் துறையில் நேரடியாக ஈடுபடும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை 18 லட்சம் பேருக்கு குறையாததாகும். ( இதில் ஏற்றமதிக்கான விவசாய உற்பத்திகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் உள்ளடங்கவில்லை).

? இவ்வளவு வளங்கள் இருந்தும், இவ்வளவு பேர் உழைப்பைக் கொடுத்தும் இலங்கை தனது மொத்த உணவுப் பொருட்களின் தேவையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை இறக்குமதி செய்தே சமாளிக்கிறது.

? கிட்டத்தட்ட 20 லட்சம் டன்கள் அரிசியை உற்பத்தி செய்யும் இலங்கை 13 லட்சம் டன்களுக்கு மேலாக கோதுமையை இறக்குமதி செய்கிறது.

? இதைவிட 350 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பால் உணவுப் பொருட்களையும்,

? 275 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சீனி. இதைவிட பருப்பு மற்றம் கடலை வகைகள், கிழங்கு, வெங்காயம், பழ வகைகள் என பெருந் தொகையில் இறக்குமதி செய்கிறது.

? ஐந்து லட்சம் சதுர கிலோ மீற்றர் பொருளாதார வலயமாக சமுத்திரத்தைக் கொண்ட இலங்கையானது பெருந்தொகையில் கருவாட்டு வகைகளையும் டின் மீன்களையும் இறந்குமதி செய்கிறது.

⚫️ 2019ம் ஆண்டு இலங்கை பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செலவு செய்த தொகை அமெரிக்க டொலர் பெறுமானத்தில் 20000 (இருபதாயிரம்) மில்லியன்கள்.

⚫️ இதில் உணவுப் பண்டங்களின் இறக்குமதிக்காக 2500 (இரண்டாயிரத்து ஐந்நூறு) மில்லியன்களும்,

⚫️ வாகனங்களுக்காக 1500 மில்லியன்களும். மருந்து வகைகளுக்காக 600 மில்லியன்களும்,

⚫️ விவசாய உர இறக்குமதிக்காக 250 மில்லியன்களும்,

⚫️ எரி பொருட்களுக்காக 4000 மில்லியன்களும்,

⚫️ கட்டிடப் பொருட்களுக்காக 1000 மில்லியன்களும் செலவிடப்பட்டன.

? 6000 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆடைகளை ஏற்றமதி செய்து
⚫️ சுமார் 3000 மில்லியன் டொலர்களை ஆடைகள், துணி வகைகள், நூல் வகைகள் மற்றும் ஆடைகள் உற்பத்தித் தொழில்களோடு தொடர்புடைய பல்வேறு வகைப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்காகச் செலவு செய்கிறது.

உற்பத்திகளுக்கான இடைநிலைப் பண்டங்களின் இறக்குமதியானது மொத்த இறக்குமதியில் 40 சதவீத இடத்தைப் பிடிக்கிறது. இவை பெரும்பாலும் ஆடை உற்பத்திகளோடு தொடர்பான ஆக்கத் தொழில் பண்டங்களாகவும்; மற்றும் உள்ளுர் நுகர்வுத் தேவைகளுக்கான பல்வேறு உற்பத்திகளோடு தொடர்பான பொருட்களாகவுமே அமைகின்றன.

வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில் வெறுமனே ஐந்து சதவீத இடத்தையே மூலதனப் பொருட்கள் பெறுகின்றன. மேலும் ஏற்றுமதி செய்யப்படும் நுகர்வுப் பொருட்கள் மொத்த ஏற்றுமதியில் 75 சதவீத பெறுமானத்தைக் கொண்டவையென கூறப்பட்டாலும்

? மொத்த ஏற்றமதியில் ஆடை ஏற்றுமதிகள் சுமார் 50 சதவீதத்தையும்

? விவசாயப் பண்டங்களின் ஏற்றுமதிகள் சுமார் 20 சதவீதத்தையும் கொண்டுள்ளன

❌ எனவே இலங்கையானது ஆடைகள் உற்பத்தி தவிர்ந்த வேறு வகையான ஆக்கத் தொழில் உற்பத்தி வகைகளை ஏற்றுமதி செய்வதென்பது மிகமிகக் குறைவாகவே உள்ளது.

❌ அதற்கான ஆற்றலை இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு கொண்டிருக்கவில்லை என்பதோடு அதனைக் கட்டியெழுப்புவதில் இலங்கையின் ஆட்சியாளர்கள் பெரிதும் அக்கறை காட்டவில்லை.

❌ இலங்கை தற்போது ஏற்றுமதி செய்யும் பண்டங்கள் தொகை ரீதியில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது. அதேபோல அவற்றிற்கான சர்வதேச சந்தை விலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. மாறாக அவை குறைவதற்கான வாய்ப்புகளையே கொண்டிருக்கின்றன.

அதேபோல இலங்கை தற்போது இறக்குமதி செய்யும் பொருட்களும் தவிர்க்கப்பட முடியாதவையாகவே உள்ளன. அந்த இறக்குமதிகளுக்கான பிரதியீடுகளை இலங்கைக்கு உள்ளேயே மேற்கொள்வதைப் பொறுத்தே இலங்கையின் இறக்குமதிச் சுமை குறைவது அல்லது கூடுவதென்பது நிர்ணயிக்கப்படும். ஆனால் இன்றைய உலக முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்பும் அத்துடன் இலங்கையின் ஆட்சியாளர்களால் வளர்த்து விடப்பட்டுள்ள பொருளாதாரக் கலாச்சாரமும் இலங்கையில் இறக்குமதிப் பிரதியீட்டுக் கொள்கையை அனுமதிக்குமா என்பது பெரும் கேள்வியாகும்.

இலங்கை இவ்விடயத்தில் ஆப்பிழுத்த குரங்கின் நிலையிலேயே உள்ளது. இன்னொரு வகையில் கூறுவதானால் புலி வாலைப் பிடித்தவன் நிலைக்கு இலங்கையின் ஏற்றமதி – இறக்குமதிப் பொருளாதாரம் ஆக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமனிதன் தனது பற்களை நீருக்கடியில் இறால் மூலம் சுத்தம் செய்யும் நபர் ! வைரல் வீடியோ
Next articleஆஹா தமிழுடன் இணையும் சிம்பு மற்றும் அனிருத்? வைரலாகும் தகவல் இதோ !