Home மட்டக்களப்பு செய்திகள் அன்னை பூபதியை நினைவு கூரத் தடை

அன்னை பூபதியை நினைவு கூரத் தடை

மட்டக்களப்பு மாமாங்கேஷ்வர ஆலயத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 34ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்க வேண்டாம் என காத்தான்குடி காவல்துறையினரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா. சாணாக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன், மாநகர முதல்வர் தி.சரவணபவான், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இ.பிரசன்னா, இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் அணித் தலைவர் கி.சேயோண், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் அணித் தலைவர் லோ.திபாகரன், சிவில் அமைப்பு தலைவர் ச.சிவயோகநாதன், வாழைச்சேனை குணசேகரம் ஆகிய 11, பேருக்கு எதிராக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அன்னை

அன்னை பூபதி நினைவு வணக்கம் அவரின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட நாவலடி கடற்கரை ஓரம் அமைந்துள்ள கல்லறையில் வழமையாக நினைவு கூரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அன்னை பூபதி யை அவரது நினைவிடத்தில் அனுஷ்டித்தால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதாம்

 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதிருகோணமலை விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு
Next articleவவுனியாவில் இருவேறு பகுதிகளில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு