Home Astrology அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 20.02.2022

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 20.02.2022

இன்றைய பஞ்சாங்கம்

20-02-2022, மாசி 08, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 09.05 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 04.42 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 20.02.2022

மேஷம்:

அசுவினி: குழந்தைகளை அரவணைத்து சென்று அவர்களின் அன்பை பெறுவீர்கள்.
பரணி: சவாலான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். சலிப்பு நீங்கும்.
கார்த்திகை 1: பெரிய பதவியில் உள்ளவர்களின் உதவியும், ஆதரவும் கிடைக்கும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நல்லவர் ஒருவர் உங்களுக்கு துணை நிற்பார்.
ரோகிணி: பணியாளர்கள் உயர்நிலைக்கு வருவார்கள். வேதனைகள் தீரும்.
மிருகசீரிடம் 1,2: பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இன்று கவனம் செல்லும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உங்களால் பயனடைந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்
திருவாதிரை: பணியிடத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: மனதில் பலம் கூடும். வாழ்வில் புதிய பாடம் கற்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பகைகள் விலகும்.
பூசம்: வியாபாரத்தை விரிவடையச் செய்வீர்கள். உங்களின் புகழ் கூடும்.
ஆயில்யம்: புதிய வாய்ப்பு கிடைப்பதால் உங்களது திறமையை நிரூபிப்பீர்கள்.

சிம்மம்:

மகம்: கோபத்தை வென்று மகிழ்வீர்கள். புதிய பொருள் வாங்குவீர்கள்..
பூரம்: பழைய முறைகளை மாற்றுவீர்கள். பணியிடத்தில் உங்களது கை ஓங்கும்
உத்திரம் 1: பதற்றத்தை ஏற்படுத்தும் விஷயத்தைக்கூட அமைதியாக கையாளுவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: எதிர்பாலின நட்பால் இன்று நன்மை உண்டாகும்.
அஸ்தம்: மறதியை வெல்லுங்கள். வீண் செலவு குறையும். மனநிறைவு ஏற்படும்.
சித்திரை 1,2: முயற்சியைப் பெருக்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: வெற்றி பெற எடுக்கும் முயற்சிகளில் பலன் கிடைக்கும்.
சுவாதி: பேச்சின் மூலம் கூடுதல் நன்மை காண்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.
விசாகம் 1,2,3: நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்று உணர்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: மற்றவர் மீது குற்றம் காணும் குணத்தை விட்டுவிடுங்கள்.
அனுஷம்: வாழ்க்கைக்கு பயன்படும் நல்ல விஷயம் ஒன்றைக் கற்பீர்கள்.
கேட்டை: நட்பு வட்டம் விரிவடையும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.

தனுசு:

மூலம்: உங்களுக்கு ஆலோசனை தரக்கூடிய நல்லவர் ஒருவரின் உதவி கிடைக்கும்.
பூராடம்: கடன் சுமை குறையும். பணியாளர்களுக்கு நல்ல செய்தி வரும்.
உத்திராடம் 1: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடைபெறுவதால் மகிழ்ச்சி கூடும்.
திருவோணம்: பிறர் கூறும் நல்ல அறிவுரைகளை மனப்பூர்வமாக ஏற்று பயன்பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2: கூடுதல் முயற்சியால் எடுத்த செயலில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நேற்று இருந்த பிரச்னைகள் இன்று முழுவதுமாக தீரும்.
சதயம்: நேரத்தை வீணடிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
பூரட்டாதி 1,2,3: மற்றவர்கள் பழிக்கும்படியான செயல்களை செய்யாதீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: உற்சாகத்தோடு பணி புரிவீர்கள். நட்பு வட்டம் விரியும்.
உத்திரட்டாதி: உங்களது பணிகளை பொறுப்புடன் நிறைவேற்றுவீர்கள்.
ரேவதி: சுபநிகழ்ச்சியில் சொந்தங்களின் சந்திப்பு நிகழ்ந்து மனதிற்கு ஆறுதல் தரும்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவன்! தேடி அலையும் மனைவி
Next articleபுருஷன் செத்து ரெண்டு வருசம் கூட ஆகல அதுக்குள்ள எவன மயக்க இப்டி மேக்கப் போட்டு திரியிறாளோ என்ற குரலை கடந்து பேருந்து நிறுத்தம் வந்தாள் அவள்