Home Astrology அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 19.02.2022

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 19.02.2022

மேஷம்:

அசுவினி: பாராட்டு கிடைக்கும். முன்னேறும் எண்ணம் உருவாகும்
பரணி: நேர்மை காரணமாக பணியிடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
கார்த்திகை 1: குடும்பத்தினருடன் நல்ல புரிதல் ஏற்பட்டு நிம்மதி தரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: புதிய நபர் ஒருவர் அறிமுகமாவார். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
ரோகிணி: பணிச்சுமை குறையும். மனஅழுத்தம் தீரும். உற்சாகம் கூடும்.
மிருகசீரிடம் 1,2: சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் உற்சாகம் அடைவீர்கள்.
திருவாதிரை: குடும்பத்தில் திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.
புனர்பூசம் 1,2,3: கடந்த காலச் செயல் ஒன்றால் இப்போது நன்மை உண்டு.

கடகம்:

புனர்பூசம் 4: இளைஞர்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும்.
பூசம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். மனபலம் பெருகும்.
ஆயில்யம்: அழகுணர்ச்சி அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.

சிம்மம்:

மகம்: அரசியலில் உயர் பதவியில் இருப்பவர்கள் நன்மை செய்வார்கள்.
பூரம்: மேலதிகாரி ஒருவரால் நன்மையும், லாபமும் பெறுவீர்கள்.
உத்திரம் 1: அனைவரும் பாராட்டும்படியான செயல் ஒன்றைச் செய்வீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வீட்டில் சில மாற்றங்களை செய்து அழகைக் கூட்டுவீர்கள்.
அஸ்தம்: குழம்பியிருந்த மனம் தெளிவுபெறும்படியான நிகழ்வு இன்று நடக்கும்.
சித்திரை 1,2: சகஊழியர்களுடன் இருந்த கசப்பு நீங்கி ஒற்றுமை பிறக்கும்

துலாம்:

சித்திரை 3,4: புதிய விஷயம் கற்பீர்கள். மனம் அமைதி அடையும்.
சுவாதி: புதிதாக நல்ல பழக்கம் ஒன்றைக் கைகொள்ள ஆரம்பிப்பீர்கள்.
விசாகம் 1,2,3: வாழ்வைத் திரும்பிப் பார்த்து கெட்ட குணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: சகஊழியர்களுக்கு உதவி செய்து அவர்களை நெகிழ வைப்பீர்கள்.
அனுஷம்: புது நட்பு மலரும். உறவினர் உங்களைத் தேடி வருவர்.
கேட்டை: பிறரை நியாயமாக நடத்துவீர்கள். நண்பரால் நன்மை கிடைக்கும்.

தனுசு:

மூலம்: எந்த விஷயமும் சிறு தடைக்குப் பிறகே நிறைவேறும்.
பூராடம்: அதிகமாக யோசித்து குழம்புவீர்கள். நேற்றைய கவலை தீரும்
உத்திராடம் 1: சிரமத்தில் உள்ள ஒருவரைக் காப்பாற்றுவீர்கள்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் மீதுள்ள பழியை நீக்கிக் கொள்வீர்கள்.
திருவோணம்: உற்சாகம் குறையாத நாள். புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள்.
அவிட்டம் 1,2: அவசரப்பட்டு பேசி நல்ல மனிதர்களை இழக்க வேண்டாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சிலருடைய உண்மை முகம் தெரிந்து வருந்துவீர்கள்.
சதயம்: தட்டிக் கேட்பதாக நினைத்து யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் ஒருவர் கிடைப்பார்.

மீனம்:

பூரட்டாதி 4: பகை தீரும். அநாவசிய செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள்.
உத்திரட்டாதி: வாழ்வில் உயர்வதற்கான வழிகளை செயல்படுத்த ஆரம்பிப்பீர்கள்.
ரேவதி: இன்று கலகலப்பான நாளாக அமையும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதிருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு பதவி உயர்வு
Next articleசிவராத்திரிக்கு நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வர அனுமதி