இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் “வரலாறு”. இந்த திரைப்படத்தில் அஜீத் மூன்று வேடங்களில் நடித்து கலக்கி இருப்பார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
படம் வெற்றி பெற்றாலும், சில அஜித் ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றே கூறவேண்டும். இந்த திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு “காட்பாதர்” ஆனால், அந்த சமயத்தில் தமிழில் தலைப்பு வரும் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும் என்பதால் படத்தலைப்பு “வரலாறு” என மாற்றப்பட்டது.
இந்த திரைப்படத்திற்காக அஜித் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது, படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் பேசி நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஹீரோ வில்லன் என நடிப்பில் மிரட்டியிருப்பார் அஜித்குமார்.
இந்தநிலையில் , இந்த படத்தில், நடித்ததற்காக தனக்கு விருது கிடைக்கும் என்று அஜித் எதிர்பார்த்தாராம். ஆனால் விருது கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்ததாக நடிகர் அஜித்தே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விருது கிடைத்ததோ இல்லையோ மக்களுக்கு மத்தியில் அஜித் நல்ல நடிகன் என்ற பெயர் கிடைத்தது.