Home Local news அந்தனி வெரங்க புஸ்பிக கடத்தப்படவில்லை! அறிவித்தது காவல்துறை!

அந்தனி வெரங்க புஸ்பிக கடத்தப்படவில்லை! அறிவித்தது காவல்துறை!

காவல்துறை தலைமையகத்திற்கு அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் மற்றும் கோட்டாகோகமவின் செயற்பாட்டாளரான அந்தோனி வெரங்க புஷ்பிகா கொழும்பு தெற்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த அவரை கோட்டை பகுதியில் வைத்து நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் அவர் கடத்தப்பட்ட செய்தியில் உண்மையில்லை என குற்றப்புலனாய்வுத்துறையின் கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் அவர் கோட்டை காவல்ததுறையினரால் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வின் கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவேலைக்காரிக்கு பிறந்த சிசு கொலை; வைத்தியர் கைது
Next articleமாநகர சபை பெண் உறுப்பினர் மீது அழுகிய முட்டை தாக்குதல்