Home Accident News அதி வேகத்தால் நேர்ந்த விபரீதம்!! பரிதாபமாய் பலியான ஆசிரியை

அதி வேகத்தால் நேர்ந்த விபரீதம்!! பரிதாபமாய் பலியான ஆசிரியை

கொழும்பு கடவத்தை வெளிவட்ட வீதியில் 16 ஆம் கிலோமீற்றர் சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணித்த லொறியுடன் பின்னால் வேகமாக பயணித்த கார் மோதியதில் கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

ரைல்ஸ் ஏற்றப்பட்ட லொறி மாத்தறையிலிருந்து கடவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​அதே திசையில் பின்னால் வந்த சொகுசு கார் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடவத்தை பகுதியை சேர்ந்த கிதானி மானெல் பிரியந்தி (வயது 47) என்ற ஒரு பிள்ளையின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியராவர்.

லொறி மீது கார் மோதியதால் கார் மோசமாக சேதமடைந்ததுடன் காரின் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார் சாரதியின் கவனக்குறைவு மற்றும் அதிவேகமே விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇரு குழுக்களிடையே மோதல்; ஒருவர் படுகொலை
Next articleதாலிக்கொடியினை அறுத்து சென்று வசமாக சிக்கிய இராணுவ வீரர்!