அட்டுலுகம பகுதியில் காணாமல் போன 9 வயது குழந்தை

அட்டுலுகம பகுதியில் 9 வயது குழந்தையொன்று காணாமல் போயுள்ளமை தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 10 மணியளவில் குறித்த பெண் குழந்தை காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

குழந்தை தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளதுடன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

அட்டுலுகம பகுதியில் காணாமல் போன  9 வயது குழந்தை

அத்துடன், CCTV காட்சிகளின் மூலம் குழந்தை கடையிலிருந்து வெளியே வந்தமை அவதானிக்கப்பட்ட போதிலும், குழந்தை வீடு திரும்பவில்லையென பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் தமது விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..