Home Economy அடுத்த ஆறு மாதங்களில் வரி மற்றும் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும்

அடுத்த ஆறு மாதங்களில் வரி மற்றும் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும்

அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள இந்த நிதி அவசியம் என கூறினார்.

எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை இலங்கை நாடும் என்றும் இது சுமார் 5 வார தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று சப்ரி கூறினார்.

அடுத்த ஆறு மாதங்களில் வரி மற்றும் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும்

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சீனா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவர்களின் ஆதரவையும் அரசாங்கம் கோரும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்க நிதியை சரிசெய்யும் முயற்சியில், நாடு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வரி விகிதங்களை உயர்த்தி எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகாலி முகத்திடலில் பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!
Next articleதிமிரும் முன்னழகு, மின்னும் பின்னழகு – ஏக்கம் மூட்டும் வித்யா ப்ரதீப்பின் புதிய புகைப்படம்