மாலபே, தலஹேனவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் (ஆர்க்கிட் கார்டன் அபார்ட்மென்ட்) வசித்து வந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் நேற்று இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அவர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஒன்பதாவது மாடியில் வசித்து வந்தார். நேற்று காலையில் தரையில் அவரது உடல் மீட்கப்பட்டது. மாடியிலிருந்து தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா என்பது இதுவரை தெரியவில்லை.
தனது தாய், சகோதரியுடன் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை வேலை முடித்து சகோதரி வீடு திரும்பிய போது, இளைஞரும், தாயாரும் வீட்டில் இருந்ததாகவும், இரவு சாப்பிட்டு விட்டு 11.30 அளவில் படுக்கைக்கு சென்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் அடிவாரத்திலுள்ள ஒரு மரத்தடியில் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞன் தலைகீழாக விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது., கைகால்களிலும் முறிவு காணப்பட்டது.
உயிரிழந்தவர் மென்பொருள் பொறியாளரான கவின் லக்ஷன் பண்டார குணரத்ன (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மாலபேயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்பட்டது.
இளைஞர்களின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை நடத்தப்படும்.
முல்லேரியா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.