சமீபத்தில் இயக்குனர் பாலாவிற்கும் நடிகர் சூர்யாவிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அதன்பின் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது இதுகுறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவை காலையில் இருந்து மதியம் வரை கால்கடுக்க வெயிலில் ஓடவைத்துள்ளாராம் இயக்குனர் பாலா.
இதனால், கடுப்பான நடிகர் சூர்யா தனக்கு வயிற்றுவலி என்று கூறிவிட்டு படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிட்டாராம்.இதன்பின், சூர்யாவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இயக்குனர் பாலா, இனி சூர்யா வரமாட்டார் என தெரிந்ததும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஒரு கூறியுள்ளார்.