தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் நல்ல இடத்தைப் பிடித்தது.
இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் AK 61படத்தின் படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக மிகவும் காத்திருக்கின்றனர்.
மேலும் நேற்று மஞ்சு வாரியர் தான் இப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது அப்படத்தில் நடிகர் ஜான் கோக்கன் வில்லனாக நடிப்பதாக மற்றுமொரு தகவல் வந்துள்ளது.
சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் ஜான் கோக்கன். தீவிர அஜித் ரசிகரான ஜான் கோக்கன் இதற்கு முன் வீரம் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.