Home Cinema அஜித் பட பாடலுடன் இன்று கோலாகலாமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணம்...

அஜித் பட பாடலுடன் இன்று கோலாகலாமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணம் வீடியோ இதோ !

தமிழ் சினிமாவில் மிருகம், அய்யனார், அரவாண் போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் ஆதி. இவருக்கு சமீபகாலமாக தமிழில் நல்ல படவாய்ப்புக் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் தயாராகி வரும் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ஆதி. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இவர் நடிகை நிக்கி கல்ராணியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நிக்கி கல்ராணி, இதையடுத்து கலகலப்பு 2, ஹரஹர மகாதேவகி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் ஆதியுடனுன் மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்தபோது தான் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

அத்தோடு இவர்களுக்கு அண்மையில் திருமணம் நிச்சயமானது. இதில் நெருங்கிய உறவினர் மாத்திரமே கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகின.

இந்நிலையில், ஆதி நிக்கி கல்ராணி ஜோடியின் திருமண இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெற்ற ஹல்தி மற்றும் மெஹந்தி போடும் விழாவில் நானி, ஆர்யா – சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அப்போது அஜித்தின் வேதாளம் படத்தில் இடம்பெறும் ஆலுமா டோலுமா பாடலுக்கு இவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறதைக் காணலாம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகாத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜாவாக நடித்த சமந்தாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
Next articleஇன்றைய ராசிபலன்- 19/05/2022, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்