அகதிகளாக சென்ற இலங்கைத் தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று புதன்கிழமை (20) அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகதிகளாக சென்ற இலங்கைத் தமிழர்கள்

அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..