உங்கள் பிள்ளைகளை இப்படியா வளர்க்கின்றீர்கள்..!!

”பெற்றோர் அனைவரும், தன் குழந்தைகள் நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல பழக்கவழக்கங்களோடு வளரவேண்டும் என்று விரும்புவார்கள்.

ஆனால், ‘நற்பண்புகளில் நாம்தான் நம் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்’ என்பதை சமயங்களில் அவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள்” என்கிறார்.

”குழந்தைகளின் உலகம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. தங்கள் அம்மா அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையில் இருந்து, அப்பாவின் உடல்மொழி வரை, தங்கள் பெற்றோரின் ஒவ்வொரு வார்த்தையையும், செயலையும் எப்போதும் உற்றுநோக்கிக்கொண்டே இருக்கும் குழந்தைகள், அதையே தாங்களும் பின்பற்றுவார்கள்.

9_16278

தங்கள் பெற்றோரையே அவர்கள் தங்களின் முதல் ரோல் மாடலாகக் கொள்வார்கள். எனவே பெற்றோர்கள் நல்ல பழக்கவழக்கங்களை, ஒழுங்குகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்கவேண்டியது மிக அவசியம்.

அதேபோல, ‘அவ எப்பவும் தன் புத்தக அலமாரியை நீட்டா வெச்சிக்குவா’, ‘இவன் எப்பப் பார்த்தாலும் இப்படித்தான் ஹோம்வொர்க் செய்ய உட்காரவே மாட்டான்’ என்று பெற்றோர் சொல்லிக்கொண்டே இருந்தால், அது நேர்மறையானதோ, எதிர்மறையானதோ… ‘நாம இப்படித்தான் இருக்கோம்போல’ என்று குழந்தைகளும் தங்களின் குணத்தை, நடத்தையை அப்படியே நிர்ணயித்துவிடுவார்கள்.

CHILDCARE-720x480

எனவே, குழந்தைகளை அணுகுவதிலும், அவர்களிடம் பயன்படுத்தும் வார்த்தைகளிலும் கவனம் தேவை” குழந்தைகளிடம் நன்மதிப்பைப் பெற, குழந்தைகளை நல்லவிதமாக வளர்த்தெடுக்க பெற்றோர்கள் செய்யவேண்டியவை குறித்த ஆலோசனைகள் இங்கே…

* ”பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசக் கூடாது. அதேபோல, ஒரு பெற்றோர் படிப்பு, உடல்நலமின்மை என்று தன் குழந்தை பற்றி வருந்திக்கொண்டிருக்கும்போது, ‘என் குழந்தையெல்லாம் சூப்பர்…’ என்று அந்த நேரத்தில் பெருமை பேசுவதையும் தவிர்க்கலாம்.

201606221016134096_Making-the-biggest-mistakes-parents-in-child-rearing_SECVPF

* பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்கள், நண்பர்கள் முன் மட்டம்தட்டிப் பேசுவது, அடிப்பது கூடவே கூடாது. மாறாக, அவர்களிடம் உள்ள நல்ல குணங்களை கூட்டத்தில் பகிர்ந்து, குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

* வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், உறவினர்கள், ‘பொண்ணு எப்படிப் படிக்கிறா?’, ‘பையன் சேட்டை பண்ணுவானா?’ என்று கேட்டால், ‘அதை ஏன் கேட்கிறீங்க…’ என்று புகார்ப் பட்டியலை வாசிக்கக் கூடாது. ‘நன்றாகப் படிக்கிறாள்/பொறுப்பாக இருக்கிறான்… வளர வளர நிறைய மாற்றத்தை உணர்கிறோம்’ என்று உயர்வாகப் பேசி குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும்.

devadharshini(1)

* குழந்தைகள் சோகமாக இருக்கும்போது அவர்களிடம் ஒரு நண்பன் போல பேசி, அவர்களின் பிரச்னையை அறிந்து அதற்குத் தீர்வு காணவேண்டும். ‘படிக்கிறதுக்கு டிமிக்கி கொடுக்க தலை வலிக்குதுனு சொல்லி உம்முன்னு உட்கார்ந்திருக்கு’ என்று உங்கள் யூகங்களை அங்கே நிரப்பி அவர்களை இன்னும் தனிமையில் தள்ளக்கூடாது.

* தினமும் குழந்தைகள் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவுடன் நண்பர்கள், பாடம், வகுப்பு, ஆசிரியர் என பள்ளியில் நடந்த விஷயங்களை அவர்கள் பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தை உருவாக்க வேண்டும்.

ai

அப்படி அவர்கள் சொல்லும்போது சலிப்பு காட்டாமல், பொறுமையுடனும் ஆர்வத்துடனும் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அதற்காக, அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததுமே, ‘இன்னைக்கு மேத்ஸ் டெஸ்டை ஒழுங்கா செஞ்சியா?’, ‘நாளைக்கு சயின்ஸ் ஒன் மார்க் டெஸ்ட் இருக்காம்… ஸ்கூல்ல இருந்து மெஸேஜ் வந்தது’ என்று விரட்டக்கூடாது.

* குழந்தைகள் தாங்கள் புதிதாக ஒரு விஷயத்தை அறிந்துகொள்ளும்போது, அதை ஆச்சர்யத்துடம் நம்மிடம் பகிர்ந்துகொள்வார்கள். அப்போது அதே ஆர்வத்துடன் பெற்றோரும் அதைக் கேட்டுக்கொள்ள வேண்டாம்.

அதைப் பற்றிய மேலதிக தகவல்களை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். ‘அம்மா மண்பானையில தண்ணீர் வெச்சுக் குடிச்சா, ஃபிரிட்ஜுல வெச்ச மாதிரியே ஜில்லுனு இருக்குமாம்’ என்று அன்றைய தினம் அவர்கள் அறிந்துகொண்ட ஒரு புது விஷயத்தை வந்து பகிரும்போது, அது உங்களுக்கு சாதாரணமான, அசுவாரஸ்யமான ஒரு தகவலாக இருக்கலாம்.

30-1443609618-4whatnottotalkinfrontofkids

ஆனால் அதை அவர்களிடம் வெளிப்படுத்தக் கூடாது. மாறாக, ‘ஆமா… சூப்பர் கூலா இருக்கும். ஃப்ரிட்ஜ்ல வெச்சு குடிக்கிற தண்ணி ஆரோக்கியத்துக்கு நல்லதில்ல. ஆனா, மண்பானைத் தண்ணியைத் தாராளமா குடிக்கலாம்’ என்று அவர்களை இன்னும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக, அறிவூட்டும் விதமாகப் பேச வேண்டும்.

* ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் குழந்தையிடம், வீட்டில் நடக்கும் கவலை தரக்கூடிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டாம். அதே சமயம், ‘நாங்க எல்லோரும் இன்னைக்கு சினிமாவுக்குப் போனோம்’ என்று அவர்கள் ஏங்கும் விஷயத்தையும் பகிர வேண்டாம்.

‘நீ லீவுக்கு வந்ததும் எங்கெங்க போகலாம்னு சொல்லு… எல்லோரும் போவோம்’ என்று, அவர்கள் ஹாஸ்டலில் இருந்தாலும், வீட்டில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தைப் புரியவைக்க வேண்டும்.

201606191507254954_DivergingParents-On-the-issueChildren-_SECVPF

* குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை குழந்தைகள் முன் விவாதிப்பது, சண்டை போடுவதை அறவே தவிர்க்க வேண்டும். நம் அப்பாவும் அம்மாவும் பிரியமானவர்கள், நம் குடும்பம் அன்பான குடும்பம் என்ற நம்பிக்கையை, பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

மொத்தத்தில், ‘என் அப்பா, அம்மாதான் சூப்பர் பேரன்ட்ஸ். என் வீடு ரொம்ப சந்தோஷமான வீடு’ என்று மகிழும், கொண்டாடும் பால்யத்தை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டியது, பெற்றோரின் கடமை!”

jaffna,jaffna news

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

13 வயது மாணவனுடன் உடலுறவு.. 24 வயதான பெண் ஆசிரியர் கர்ப்பம்..!!

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவன் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி… அசராம அடிக்கிறது பாபா பாலிசி’ ..

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி..!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள கோடாக் மகிந்த்ரா வங்கி கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் ரவி(28). இவர் பணி (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இந்த வேலை செய்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமாம்..??

மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

காதல் என்ற போர்வையில் 14 வயது சிறுமியுடன் குடித்தனம் ..!

காதல் என்ற போர்வையில் 14 வயது மாணவியொருவருடன் குடித்தனம் நடத்தி வந்த 21 வயது இளைஞரொருவர் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம்..!!அதிர்ச்சி சம்பவம்..!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோதரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பொண்ணுங்க இதுக்காக தான் சேலை கட்டுவதில்லையாம்..!!

பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் பெண்களை பொறுத்தமட்டில் சேலைதான் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இலங்கையில் 170 வயதுடைய நபர்..!!ஆச்சரியமாய் இருக்கின்றதா..??

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

லட்சுமியை வறுத்தெடுத்த நிர்மலா பெரியசாமி..!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் உயோகிக்கும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா? (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள்.!!

எந்த ஒரு விடயமும் முகத்திற்கு நேராக மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ (more…)